புதுடில்லி:"பெட்ரோல் பங்க்'களில், டீசலை, மொத்தமாகவோ, சில்லறையாகவோ, அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்கி கொள்ளலாம்' என, அகில இந்திய பெட்ரோல் பங்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.டீசல் விலையை, கடந்த, 17ம் தேதி, மத்திய அரசு உயர்த்தியது. இதனால், மாநில அரசு போக்குவரத்து கழகங்கள், 1 லிட்டர் டீசலுக்கு, 10 ரூபாய் அதிகம் செலவிட வேண்டிய நிலை எழுந்தது.
இதையடுத்து, விலை குறைவாக உள்ள, தனியார் பெட்ரோல், "பங்க்'களில், தமிழகம் உள்பட பல மாநில போக்குவரத்து கழகங்கள், தங்கள் பேருந்துகளுக்கு, டீசல் நிரப்பிக் கொள்கின்றன.இதுகுறித்து, அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டில், 42 ஆயிரம் பெட்ரோல், "பங்க்'கள் உள்ளன. அவற்றில், அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை மொத்தமாகவோ, சில்லறையாகவோ வாங்கி கொள்ளலாம். இதற்கான அறிவிப்புக்கள் அனைத்து விற்பனையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.