சென்னை : திருவண்ணாமலை, நித்யானந்தா ஆசிரமத்திற்கு, இந்து சமய அறநிலையத் துறை கொடுத்திருந்த நோட்டீசை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனால், ஆசிரமத்தை, அறநிலையத் துறை கைப்பற்றுவது, தடை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கிரிவலப் பாதையில், நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு, பல்வேறு சிலைகள் அமைத்து, தினமும் பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், "இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், ஆசிரமத்தை கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேட்டு, இந்து சமய அறநிலையத் துறை, "நோட்டீஸ்' அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என, நித்யானந்தா தியான பீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், அறநிலையத் துறை நோட்டீசுக்கு தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: நித்யானந்தா தியான பீடம், வழிபாடு தலம் அல்ல என்பது, அறக்கட்டளை ஆவணம் மூலம் தெரிய வருகிறது. தியான பீட அறக்கட்டளையை, கையகப்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்ட, நோட்டீஸ் அடிப்படை ஆதாரமற்றது. ஆகவே, இந்து சமய அறநிலையத் துறை, இதை கையகப்படுத்த முடியாது. எனவே, இந்து சமய அறநிலையத் துறை நோட்டீசை ரத்து செய்கிறேன். இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.
தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : "தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாவட்ட கலெக்டர், உடனே நிவாரண உதவியை வழங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி கலவரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் செங்கொடி தாக்கல் செய்த முதல் டிவிஷன் பெஞ்ச், "அரசு ஒதுக்கியுள்ள, 7.32 கோடி ரூபாயை, கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், தர்மபுரி மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும்; இந்நடவடிக்கையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கண்காணிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு குறித்து, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், அருணா ஜெகதீசன் முன், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், நேற்று முறையிட்டார். அப்போது, "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் காசோலைகளாக, நிவாரண உதவியை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். தர்மபுரி மாவட்ட கலெக்டரே, நிவாரண தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரினார். அதை தொடர்ந்து, நீதிபதிகள்," நிவாரண உதவிகளை, தர்மபுரி கலெக்டர் உடனே வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.