Advertisement
அனுமதி இல்லாத விளம்பர பலகை : ஒரு வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:45 IST

சென்னை: "அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை, ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும்' என, கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தாக்கல் செய்த பொது நல மனுவில், "சாலை ஓரங்கள்,தெருக்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றி, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், கடந்தாண்டு, நவம்பரில், ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில்,"அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டனவா, அதை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறியிருந்தது.

இந்த வழக்கில், கலெக்டர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், தட்டிகள் அவ்வவ்போது அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், விளம்பர பலகை வைப்பவர்களை கண்டறிய முடியவில்லை. விளம்பர பலகை வைப்பவர்கள், அங்கிருந்து தப்பி விடுகின்றனர். மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை கைப்பற்றிய பின், அதை யாரும் திருப்பி கேட்டு வருவதில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி, தர்மாராவ், நீதிபதி, அருணா ஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விளம்பர பலகைகளை வைத்து விட்டு, தலைமறைவாகி விடுவதாக கூறும் பதிலை ஏற்க முடியாது. அந்த விளம்பர கம்பெனி உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு, ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கிறோம். விளம்பர பலகை, வைத்திருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவை, இந்த ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Chola Associates - chennai,இந்தியா
01-பிப்-201320:05:30 IST Report Abuse
Chola Associates சென்னை சத்யா ஸ்டுடியோ எதிரில், தமிழ்நாடு அமைச்சர்கள் வீட்டிற்க்கு செல்லும் பாதையில் ஒரு சிறு கடை மேல் விளம்பர பலகைகள் பல, கடந்த ஒரு ஆண்டாக வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது மேலும் சில விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விளம்பர பலகைகள் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாதா? இந்த விளம்பர பலகைகள் அனைத்தும் உடனே எடுக்கவேண்டும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
01-பிப்-201312:12:10 IST Report Abuse
samuelmuthiahraj டிராபிக் ராமசாமி அய்யா சொல்லி கோர்ட் சொன்னால்தான் காவல்துறை நடவடிக்கை என்றால் அதிகாரிகள் ஏன் அரசு சம்பளத்தில் கும்மாளம் அடிக்க வேண்டும் .கேவலமாக உள்ளது,ஒவ்வொன்றையும் நீதிபதி சொல்லி தான் செய்ய வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது அவமானமாக தெரியவில்லையா தயவு செய்து பாரபட்சமின்றி அதிரடி உடனடி நடவடிக்கை எடுங்கள் சாலையை பராமரித்து சாதனையாளர்களாக மிளிருங்கள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பணியை விட்டு எடுங்கள் இல்லையென்றால் வாங்கும் சம்பளம் வீணாகிவிடும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.