statue of cm., father, "Notice ' to bhubindar singh hooda | தந்தைக்கு சிலை வைத்த முதல்வருக்கு, "நோட்டீஸ்'| Dinamalar

தந்தைக்கு சிலை வைத்த முதல்வருக்கு, "நோட்டீஸ்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தந்தைக்கு சிலை வைத்த முதல்வருக்கு, "நோட்டீஸ்'

சண்டிகர்:முக்கிய சாலை சந்திப்பில், காலியாக கிடந்த இடத்தில், தன் தந்தைக்கு சிலை வைத்த, அரியானா முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு, 65, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட், "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தலைமுறை தலைமுறையாக தங்கள் பெயர் நிலைத்திருக்க வேண்டும்; அதன் மூலம் ஆட்சி, அதிகாரம் தங்கள் வசம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சில அரசியல்வாதிகள், காலியிடங்களில் சிலைகளை வைத்து வருகின்றனர்.


கடந்த, 18ம் தேதி, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா மற்றும் எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் சிலை, நினைவு சின்னங்கள் வைக்க தடை விதிக்கப்பட்டது.அந்த உத்தரவில், "காலியாக கிடக்கும் பொது இடம், பொதுமக்கள் எளிதாக நடமாடுவதற்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் சிலைகள் அங்கு வைப்பதற்காக அந்த இடங்களை பயன்படுத்த கூடாது' என உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவை, நன்கு அறிந்திருந்த போதிலும், அரியானா காங்கிரஸ் முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா, தன் தந்தை, ரன்பீர் சிங் ஹூடாவிற்கு சிலை வைத்துள்ளதை எதிர்த்து, தவிந்தர் சர்மா என்பவர், மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.ஜெயின் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.


"பொது இடத்தில் சிலைகள் வைக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், அதை கண்டுகொள்ளாமல் தந்தைக்கு சிலை வைத்தது ஏன்?' என கேட்டு, அரியானா அரசுக்கும், ரோடக் உள்ளாட்சி அமைப்பின் துணை கமிஷனருக்கும், நீதிபதிகள், "நோட்டீஸ்' அனுப்பினர்.முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவின் தந்தை, ரன்பீர் சிங் ஹூடா, அரியானாவில், பலம் வாய்ந்த, ஜாட் இன தலைவர்களில் ஒருவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்; அரசியல் அமைப்பு சட்ட வரைவு கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர். காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதால், உயர் பதவிகளில் தனது, 92 வயது வரை இருந்தவர்.அவரின் மகன், பூபிந்தர் சிங், அம்மாநில முதல்வர்; இவர், மூத்த தலைவர், மறைந்த தேவிலாலை பல முறை, தேர்தலில் தோற்கடித்தவர். இவரின் மகன், தீபிந்தர் சிங், எம்.பி.,யாக உள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
01-பிப்-201309:37:19 IST Report Abuse
Puthiyavan Raj சிலை வைப்பது மட்டும் அரசின் கொள்கை முடிவு இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-201307:31:46 IST Report Abuse
Lion Drsekar ஐயா உங்களுக்கு உங்க அப்பா உயர்ந்தவர், எங்களுக்கு எங்கப்பா உயர்ந்தவர் இப்படி போனால் ஒரு வீட்டிற்கு ஒரு சிலை வைக்கவேண்டும், நீங்கள் காசு கொடுத்து நிலம் வாங்கி அங்கு சிலை வைத்துக்கொள்ளுங்கள், அதேபோல் எங்களுக்கும், அனுமதி தாருங்கள் இது இப்படியே போனால் உங்களுக்குக் கூட நிற்க இடம் இருக்காது, எங்கள் கவிஞர் அப்போதே கூறியிருக்கிறார் வந்தவெரெல்லாம் நிரந்திரமாக இங்கேயே தங்கிவிட்டால் வருவோர்க்கு தங்க இடம் ஏது என்று அதுபோல் இந்த சிலைகலாச்சரம் முதலில் ஒழியவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.