E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பலாத்கார வழக்கில் 35 பேர் விடுதலை ரத்து:சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 பிப்
2013
02:19
பதிவு செய்த நாள்
பிப் 01,2013 00:53

புதுடில்லி:சிறுமியை கடத்திச் சென்று, 40 நாளில், 42 பேர், பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 35 பேரை விடுவித்த, கேரள ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட் நேற்று, ரத்து செய்தது.இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, 1996ம் ஆண்டு, பஸ் நடத்துனர், ராஜு என்பவர் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார். பின் அச்சிறுமியை, 40 நாளில், 42 பேர் பலாத்காரம் செய்தனர்.அந்த கும்பலில் சிக்கி தவித்த சிறுமி, ஒரு மாதத்திற்கு பிறகு, அக்கும்பலிடம் இருந்து தப்பினாள்.

இரு ஆண்டுகளுக்கு பின், இந்த சம்பவம் வெளியே தெரிந்தது. மாநிலம் முழுதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, 1999ம் ஆண்டு கேரள அரசு உத்தரவுப்படி, 35 பேரை, போலீசார் கைது செய்தனர்.வழக்கில் தொடர்புடைய சிலர், தலைமறைவாகி விட்டனர்.இவ்வழக்கில், 2000ம் ஆண்டு, குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின், கேரள ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், 2005ம் ஆண்டு ஜனவரி, 20ம் தேதி, தண்டனை விதிக்கப்பட்ட, தர்மராஜன் என்பவரை தவிர, 35 பேரையும், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.பாதிக்கப்பட்ட சிறுமி, இதை எதிர்த்து, அதே ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.நேற்று வழங்கப்பட்ட உத்தரவு:கேரள ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, ஆச்சரியமாக உள்ளது. எனவே, அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு மீண்டும் கேரள ஐகோர்ட்டிலேயே மறு விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும். அனைவரது ஜாமின் உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. வெளியே உள்ள அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.