புதுடில்லி:மகளிர் பாதுகாப்புக்காக, டில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட, 24 மணி நேர, "ஹெல்ப்லைன்' மீண்டும் பழுதடைந்தது.டில்லியில், டிசம்பர், 16ம் தேதி, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ வசதியாக, 24 மணி நேர, "181' எண் கொண்ட, "ஹெல்ப்லைன்' துவக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா நடந்த அன்றே, அந்த சேவை செயல்படவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு தான், "181' செயல்பட்டது.
டில்லி முதல்வர், ஷீலா தீட்சித் அலுவலகத்தில் செயல்படும், 181, "ஹெல்ப்லைன்' கடந்த சில நாட்களாக மீண்டும் செயல்படவில்லை. பூமிக்கடியில், கேபிள்கள் பதிக்கும் பணி காரணமாக, இணைப்புகள் பழுதடைந்ததாக கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, டில்லி, தகவல் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழுதடைந்த தொலைபேசி இணைப்புக்களை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இணைப்புக்கள் செயல்பட துவங்கும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.