நாசிக்:தனியார் நிறுவனம் மீதான புகாரை பதியாமல் இருக்க, 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே, தனியார் நிறுவனம், விவசாய இடு பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், முறைகேடாக வைப்பு நிதி பெற்று வருவதாக, அந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.
வழக்கு பதியாமல் இருக்க, 1 கோடி ரூபாய் தர வேண்டும் என, போலீஸ்காரர், பிபின் ஜெகன்னாத் திவாரி என்பவர், நிறுவன மேலாளரிடம் கேட்டார். "அவ்வளவு பணம் தர இயலாது' என, மேலாளர் தெரிவிக்கவே, படிப்படியாக பேரம் குறைக்கப்பட்டு, 65 லட்சம் ரூபாய்க்கு படிந்தது.லஞ்சமாக, 65 லட்ச ரூபாய் கேட்ட போலீஸ்காரரை, வசமாக சிக்க வைக்க முடிவு செய்த, நிறுவன மேலாளர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆலோசனைப்படி, லஞ்ச பணத்தை, நிறுவன மேலாளர், போலீஸ்காரர் திவாரியிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.