ரேவா:கல்லூரி மாணவியரிடம், தவறாக நடந்த பேராசிரியரை, மாணவியர் சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சில்மிஷ பேராசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம், ரேவா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், சந்தோஷ் திவாரி என்ற பேராசிரியர், பணியாற்றி வந்தார். இவர், 29ம் தேதி, கல்லூரி மாணவியரிடம் தவறாக நடந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், சக மாணவியரிடம், இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த மாணவியர், கும்பலாக சேர்ந்து, பேராசிரியர் திவாரி மீது தாக்குதல் நடத்தினர்.கல்லூரிக்கு வெளியே வந்த போது, மாணவியர் தாக்கியதை, ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். அவர்களும், மாணவியருடன் சேர்ந்த, "சில்மிஷ' பேராசிரியரை, "துவைத்து' எடுத்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய பேராசிரியர், ஓட்டம் பிடித்தார். பின் அவர், போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த காட்சிகள், உள்ளூர், "டிவி'யில் ஒளிபரப்பு ஆனதால், பரபரப்பு தொற்றி கொண்டது.சம்பவம் பற்றி அறிந்த கல்லூரி முதல்வர், அந்த பேராசிரியரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.