போபால்:""பிரதமர் பதவிக்கான போட்டியில், பாரதிய ஜனதாவில் பலர் இருக்கின்றனர்; நான் கட்டாயம் இல்லை,'' என, முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான, வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:கோவா மாநிலத்தின் பனாஜி நகரில், நேற்று முன்தினம் நான் பேசிய போது, எங்கள் கட்சியில் பிரதமர் பதவிக்கு தகுதியான பலர் உள்ளனர் என கூறியிருந்தேன். நான் அந்த போட்டியில் இல்லை என, பல முறை கூறியிருக்கிறேன்.
பிரதமர் ஆவதற்கு தேவையான பல தகுதிகளை, குஜராத் முதல்வர் மோடி பெற்றுள்ளார் என, நான் உட்பட, கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் கூறியுள்ளனர். எனினும், பிரதமர் வேட்பாளர் குறித்து, எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.கட்கரியை, இரண்டாவது முறையாக, தலைவர் பதவியில் அமர்த்துவதில், பா.ஜ., தலைவர்கள் சிலருக்கு விருப்பம் இல்லை என கருத்து தெரிவித்துள்ள, எம்.ஜி.வைத்யா, ஆர்.எஸ். எஸ்., அமைப்பின் செய்தி தொடர்பாளர் இல்லை.இவ்வாறு, வெங்கய்யா நாயுடு கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.