பெங்களூரு:பெண்களின் பாதுகாப்பிற்கான, முழுதும் பெண் போலீசாரால் இயக்கப்படும், "அபயா' போலீஸ் வாகனங்கள், பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டன.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முழுதும் பெண் போலீசார் இடம் பெறும், "அபயா' என்ற பெயரிலான, போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் பெங்களூருவில், "அபயா' வாகனங்களை, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் மனைவி, ஷில்பா ஷெட்டர் துவக்கினார்."அபயா' வாகனத்தில் வரும் பெண் போலீசார், பெண்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன், நடவடிக்கை எடுப்பர். 24 மணி நேரமும் செயல்படும், "ஹெல்ப்லைன்' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது."அபயா' வாகனத்தில், பெண் எஸ்.ஐ., இரு பெண் காவலர்கள் இருப்பர். இந்த வாகனங்கள், 24 மணி நேரமும் நகரில் முக்கிய இடங்களிலும், பெண்கள், சிறுமிகள் நடமாடும் பகுதிகளின் அருகே செயல்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.