பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ராஜினாமா செய்த, 13 எம்.எல்.ஏ., க்கள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், நேற்று, கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தனர்.உதாசி, ÷ஷாபா, சந்திரப்பா உள்ளிட்ட, 13 பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள், கடந்த, 29ம் தேதி, தங்கள் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் போப்பையாவிடம் அளித்தனர். பல மணி நேர இழுபறிக்கு பின், போப்பையா, ராஜினாமா கடிதத்தை பெற்று கொண்டார்.இதையடுத்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கட்சியான, "கர்நாடகா ஜனதா கட்சி'யில் இணைவதற்கான முயற்சிகளை, அந்த எம்.எல்.ஏ.,க்கள் மேற்கொண்டனர்.
நேற்று அனைவரும், மல்லேஸ்வரத்தில் உள்ள, கே.ஜே.பி., அலுவலகத்தில், கட்சி தலைவர், எடியூரப்பா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தனர்.கட்சியில் இணைந்த அனைவருக்கும், கே.ஜே.பி.யின் சின்னம் கொண்ட துண்டை அணிவித்து எடியூரப்பா வரவேற்றார்.அவர் பேசியதாவது:நான் எந்த, எம்.எல்.ஏ.,வையும் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் தாங்களாவே ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜ., அரசை கவிழ்க்கும் திட்டம் ஏதுமில்லை.
தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கி, எம்.எல்.ஏ.,க்களை, பள்ளி குழந்தைகள் போல் சபாநாயகர், போப்பையா நடத்தியுள்ளார்.முதல்வர், ஷெட்டர் பட்ஜெட் தாக்கல் செய்வது சந்தேகம் தான். இன்னும் சில எம்.எல்.ஏ., க்கள் ராஜினாமா செய்தால், ஆட்சிக்கு பிரச்னை வரும் என்று கருதி, சபாநாயகர் போப்பையா, மடிகேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.