Advertisement
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:08 IST
கருத்துகள் (3)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்ரவரி மாதத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும்; ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமும்; கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுக்கு, 15 நாள் வரை, அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து இருந்ததால், நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் தருணத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாணவர்களின் விவரங்களை, "

ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்., 4 முதல், 6ம் தேதி வரை, இயலாக் குழந்தைகளுக்கான கல்வி முறை குறித்த பயிற்சியும்; பிப்., 4 முதல், 7ம் தேதி வரை, கணிதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம்,பாடவாரியாக,பிப்., 4ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும், பள்ளியிலிருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது பங்கேற்க வேண்டியுள்ளது.எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உருவாகி, தேர்வு நேரத்தில் மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால், நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வியாண்டின் இறுதியில், பாடம் நடத்துவது குறித்து பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் எந்த அளவுக்கு பயன் பெறுவர் என்பது தெரியவில்லை.தேர்வுக்கு மாணவனை தயார்படுத்த வேண்டிய நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவதால்,பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர் இருப்பதே, அரிதாக உள்ளது. நடப்பாண்டில், மாணவர்களின் விவரங்களை "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணியும் சேர்ந்து கொண்டதால், அனைத்து பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.சமச்சீர் கல்வியில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு உள்ளதால், செய்முறை பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
01-பிப்-201315:37:41 IST Report Abuse
Divaharan கோடை விடுமுறையில் என்ன செய்கிறார்கள் ?
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
04-பிப்-201312:52:24 IST Report Abuse
LAXபரீட்சை பேப்பர்களை யார் திருத்தி தேர்ச்சி அட்டவணை வெளியிடுவது? அட்மிஷன் வேலைகளை யார் கவனிப்பது? ஆனாலும் தேர்வு நேரத்தில் பயிற்சி சரியில்லைதான்.. பயிற்சிக்கு சரியான நேரம் வரையறை செய்யவேண்டும்....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
01-பிப்-201314:17:42 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar ஆசிரியர்களுக்கு பயிற்சி கோடை விடுமுறை நாளில் வழங்கு தான் சிறப்புக்குரியவை. புதிய ஆசிரியர்கள் இந்த அடிப்படையில் பணி நியமனம் தேர்வு செய்வது சாலச்சிறந்தது. பூபதியார்
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.