புதுடில்லி:"பாலியல் பலாத்கார வன்முறை மற்றும் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு, உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு, தனியார் மருத்துவமனைகள் உட்பட எந்த மருத்துவமனைகளும் மறுக்க கூடாது; இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவுகளை, மருத்துவமனைகளுக்கு பிறப்பிக்க வேண்டும்' என, டில்லி மாநில அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லியில், கடந்த, டிசம்பர், 16ம் தேதி, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பல மணி நேரம் தாமதமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அந்த சம்பவத்தின் போது, போலீஸ், நிர்வாகம், மருத்துவம் ஆகிய துறைகளில், பல காலமாக பின்பற்றப்பட்டு வரும், பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த வழக்கு, நேற்று மீண்டும், டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி, டி.முருகேசன் தலைமையிலான, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பாலியல் பலாத்கார வன்முறையில், விபத்துகளில் காயம் அடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனைகள் மறுக்க கூடாது. இது தொடர்பாக, டில்லி நகர மருத்துவமனைகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை, டில்லி அரசின், சுகாதார துறை முதன்மை செயலர் பிறப்பிக்க வேண்டும்.காயம் அடைந்தவர்களின் நிலையை பார்த்து, முதலுதவியோ, அவசர சிகிச்சையோ, உடனடியாக அளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 28ம் தேதி நடைபெறும்.இவ்வாறு, தலைமை நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.