மும்பை:""லோக்சபா தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை விரைவாக முடிவு செய்ய வேண்டும்,'' என, அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி தலைவர், உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.இது குறித்து, சிவசேனா கட்சி பத்திரிகையான, "சாம்னா'வில், உத்தவ் தெரிவித்துள்ளதாவது:அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி, அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில் தான் என்றாலும், கடைசி நேரத்தில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது என்பதற்காக, இப்போதே தீர்மானிக்க வேண்டியது அவசியம். அதற்கான விவாதத்தை, தே.ஜ., கூட்டணி கட்சிகள், இப்போதே துவக்க வேண்டும்.
கடந்த, ஜனாதிபதி தேர்தலின் போது, இறுதி வரை, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தீர்மானிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில், சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவானது. அதில், கூட்டணி கட்சிகளுக்கு, கருத்தொற்றுமை ஏற்படவில்லை.சங்மாவுக்கு ஆதரவளிக்க, பால் தாக்கரே முன் வரவில்லை; அவருக்கு பதில், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என முடிவு செய்தார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, சுஷ்மா சுவராஜ், சிறப்பான தேர்வு. அவர் இல்லையேல், வேறு யார் என்பதை, பா.ஜ., தெரிவிக்கட்டும்; அனைவரும் பேசி முடிவு செய்வோம். கடைசி நேரம் வரை காத்திருக்காமல், அதை விரைவாக செய்வோம்.சுஷ்மா சுவராஜ், புத்திசாலித்தனமான தேர்வு. பிரதமர் பதவியை அவர் சிறப்பாக மேற்கொள்வார் என்ற நம்பிக்கை, தாக்கரேவுக்கு இருந்தது.இவ்வாறு, உத்தவ் தாக்கரே கூறினார்.
இதற்கிடையே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்பதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான, சிரோன்மணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் தலைவரும், பஞ்சாப் துணை முதல்வருமான, சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:பிரதமர் வேட்பாளராக யாரை, பாஜ., தேர்ந்தெடுத்தாலும், அதை அகாலி தளம் வரவேற்கும். எனினும், எங்களை பொறுத்த மட்டில், பிரதமர் பதவிக்கு, மோடி பொருத்தமானவர். ஐக்கிய ஜனதா தளம், என்ன கருத்து கொண்டுள்ளது என்பது பற்றி தெரியாது; நாங்கள் எப்போதும், பா.ஜ.,வுடன் தான் இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.