ரிஷிகேஷ்:பிரேசில் நாட்டை சேர்ந்த பேராசிரியர், இந்து மதத்தின் பெருமைகளையும், தத்துவங்களையும், உலகம் முழுதும் பரப்பி வருகிறார். ஜேன்டர்சன் பெர்னாண்டஸ் டி ஒலிவியரா என்ற பெயர் கொண்ட, 48 வயது, பிரேசில் இளைஞர், கிறிஸ்தவ மத பாதிரியார் ஆக, சேவை செய்ய படித்தவர். அப்போது, பல மதங்களின் கொள்கைகளையும், தத்துவங்களையும் படிக்க நேர்ந்தது.
அவற்றில் இந்து மத கொள்கைகள் அவரை அதிகமாக ஈர்த்துள்ளது. ரிஷிகேஷ் நகரில் வாழ்ந்த ஹன்ஸ் ராஜ் மகராஜை, 1999ல் சந்தித்த பிறகு, அவர் சீடராகி விட்டார்.அதற்கு பிறகு, இந்த மத, சனாதன தர்மத்தை உலகம் முழுதும் பரப்பி வருகிறார். தத்துவ இயலில், பேராசிரியர் பட்டம் பெற்றுள்ள ஜேன்டர்சனின் இப்போதைய பெயர், ஸ்ரீ பிரேம் பாபா.உத்தர பிரதேசத்தின் அலகாபாத் கங்கை நதிக்கரையில் நடைபெற்று வரும், மகா கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள பிரேம் பாபா, இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருப்பார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.