மலப்புரம்:"விசா' விதிகளை மீறி, மத நடவடிக்கைகளில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்ட வாலிபர், கனடாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.கனடா நாட்டை சேர்ந்தவர், முகமது நவாஸ், 35. சுற்றுலாவுக்காக, டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். தமிழகம், ஆந்திரா என, பல இடங்களுக்கும் சென்ற அவர், கேரளாவின், மலப்புரம் அருகே, அரிக்கோடு பகுதியில் தங்கியிருந்தார். அவருடன், அப்துல்லா, அப்துல் ரகுமான் மற்றும் ஜபார் கான் ஆகியோர் தங்கியிருந்தனர்.இவர்கள் நான்கு பேரையும், போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர். அதில், முகமது நவாஸ், "விசா' விதிகளை மீறி, மலப்புரம் பகுதியில், மத பிரசாரம், பயிற்சி வகுப்புகள் நடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, அவரை கனடாவுக்கு திருப்பி அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர்; அவருடன் இருந்த மூவரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.