ஸ்ரீநகர்:"மக்கள் ஆதரவு உள்ளது என கூறும் தேசிய மாநாட்டு கட்சி, தேர்தல் கூட்டணிக்காக, காங்கிரசிடம் ஏன் கெஞ்சுகிறது?' என, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை, எதிர்க் கட்சியான, மக்கள் ஜனநாயக கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு, நான்காண்டுகளை கடந்துள்ளது. தனது ஆட்சியின் சாதனைகள் குறித்த அறிக்கையை, முதல்வர் உமர் அப்துல்லா சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "என் தலைமையிலான நான்காண்டு கால ஆட்சிக்கு, மாநில மக்கள் நற்சான்றிதழ் தந்துள்ளனர். ஆனால், எதிர் கட்சியினரும், பயங்கரவாதிகளும், என்னை பற்றியும், ஆட்சியை பற்றியும் குறை கூறுவது பற்றி நான் கவலைப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநில எதிர் கட்சியான, மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர், நயீம் அக்தார் கூறியதாவது:நான்காண்டு கால ஆட்சி குறித்து, முதல்வர் மிகவும் பயந்து போயுள்ளார். தன் எதிர்காலம் குறித்தும் அவர் கவலைப்படுகிறார். நான்காண்டுகளாக மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை அளித்திருந்தால், ஏன் கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்ச வேண்டும்?இவ்வாறு, நயீம் அக்தார் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.