மேட்டூர்: சில மாத இடைவெளிக்கு பின், கொளத்தூர் அருகே மீண்டும் மர்மகாய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சலால் பாதித்த பெரும்பாலான மக்கள், எழுந்து நடக்க கூட முடியாமல் ஒரு வாரத்துக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஒரு ஆண்டுக்கு முன், தமிழத்தில் பரவிய சிக்-குன்-குனியா காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்கு முன், பரவிய மர்மகாய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் பாதித்தனர். சில இடங்களில் குழந்தைகள் பலியாயினர். இதற்கு மர்மகாய்ச்சலே காரணம் என கூறப்பட்டது. காய்ச்சலை தடுக்க அனைத்து அரசு சித்தா மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதனால், காய்ச்சல் தீவிரம் குறைந்த நிலையில், மேட்டூர் அடுத்த நிலவுக்கல்புதூர் கிராமத்தில் தற்போது ஒருவித மர்மகாய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சலால் கிராமத்தில் முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதித்தவர்கள் உடல்வலி, மூட்டு வலி, தலைவலியால் அவதிப்படுகின்றனர். எழுந்து நடக்க கூட முடியாததால் பலர் வீட்டில் படுக்கையிலேயே முடங்கி கிடக்கின்றனர். கிராமத்தில் பெரும்பாலோர் கூலி தொழிலாளர்கள். காய்ச்சல் பாதித்த தொழிலாளர்கள் வேலைக்கு கூட செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியதால், அவர்களின் வருமானமும் பாதித்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதித்துள்ளனர். மருத்துவ குழுவினர் வந்து ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து சென்றனர். எனினும், காய்ச்சல் நீடிப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலும், பெண்கள் வீட்டு வேலை செய்ய முடியாமலும் படுக்கையில் முடங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விமலா கூறுகையில், ""நிலவுக்கல்புதூர் கிராமத்துக்கு டாக்டர் கணேஷ் தலைமையில் மருத்துவகுழு சென்று காய்ச்சால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து மாத்திரை கொடுத்துள்ளனர். இதுசீதோஷ்ண நிலை மாற்றத்தால் வரும் வைரஸ்காய்ச்சல்தான். எனினும், காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.