லக்னோ:""ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் நடித்த, "விஸ்வரூபம்' படத்திற்கு, உத்தர பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படும்,'' என, மாநிலத்தின் ஆளும், சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலர், ராம் ஆஸ்ரே குஷ்வாகா தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:அந்த படம் அதிகாரிகள் முன்னிலையில் திரையிடப்பட்டு, அவர்கள் பார்த்த பிறகு, அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என தெரிய வந்த பிறகு, திரையிட அனுமதிக்க முடியும். அதில், ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என்றால், நல்லது. இருப்பின், படத்தை திரையிட தடை விதிக்கப்படும்.இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி காட்சிகள் இருந்தால். படத்தை மாநிலத்தில் திரையிட முடியாது. இவ்வாறு ராம் ஆஸ்ரே குஷ்வாகா தெரிவித்தார்.
இதற்கிடையே, தன் படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என, நடிகர் கமல் அறிவித்துள்ளது குறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாரிடம் கேட்டபோது, ""நம் அரசியல் அமைப்பில் ஏதோ தவறு உள்ளது; எந்தவொரு இந்தியனும், இந்த நாட்டின் மீது நம்பிக்கையில்லை என உணரும் அளவில் பிரச்னை இருக்க கூடாது,'' என்றார்.
"விஸ்வரூபம்' திரைப்படம் குறித்து, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர், மனீஷ் திவாரி கூறுகையில், ""இந்த விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், அது குறித்து கருத்து தெரிவிப்பது நியாயமாக இருக்காது; எனினும், சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து, தேவைப்பட்டால், சினிமாடோகிராப் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.