ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தாய் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், வளர்ச்சி பணிகள் குறித்த தகவல் பலகைகள், பயன்படுத்தாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.தாய் திட்டம்ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 58 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. கிராம ஊராட்சி களின், பல்வேறு திட்டங்களின் கீழ், வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல், தாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தார் சாலைகள், கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சாலைகள், குடிசை மேம்பாடு என, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்திப்பட்டன.இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களில், தாய் திட்டம் குறித்த தகவல் பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றில், ஊராட்சியின் பெயர், பணியின் பெயர், மதிப்பீடு குறித்த விவரங்கள் அடங்கி உள்ளன. இந்த தகவல் பலகைகளை, பணி நடைபெறும் இடத்தில், நட்டு வைக்க வேண்டும். ஆனால், அவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ளது. பயன்படுத்தாத இந்த தகவல் பலகைகளில், சிமென்ட், தூசி படர்ந்து, வீணாகி வருகின்றன. காரணம் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "எந்த திட்டம், என்ன மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்கு தெரிந்து விட்டால், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் எடுக்க முடியாது. எனவே, அவற்றை பணி நடக்கும் இடங்களில் பொருத்தாமல், மறைத்து வைத்துள்ளனர் போல இருக்கிறது,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.