புதுடில்லி:""பாகிஸ்தான் வீரர்கள் பலர், முன்னர் பல முறை, இந்திய வீரர்களால், தலை வெட்டி கொல்லப்பட்டுள்ளனர் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளதில் உண்மையில்லை; இது போல், பல முறை பாகிஸ்தான் கூறியுள்ளது; அவை தவறான தகவலாகவே போயுள்ளது,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அமைச்சர், அந்தோணி நேற்று கூறியதாவது:எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், பாகிஸ்தான் வீரர்களால், இந்திய வீரர்கள் தலைவெட்டி கொல்லப்பட்டதை அடுத்து, இந்திய எல்லையில் நிலவிய பதற்றம், இரு நாடுகளின் ராணுவ செயல் தலைமை இயக்குனர்கள் சந்திப்பிற்கு பிறகு தணிந்துள்ளது.
இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களை முன்னர் பல முறை தலைவெட்டி கொன்றுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் தகவல் பொய்யானது. இது போல், பல முறை பாகிஸ்தான் கூறியுள்ளது. அவை அனைத்தும் பொய்யான தகவல்களாகவே ஆகியுள்ளன.பிரம்மபுத்ரா நதியில், சீனா அணைகள் கட்டி வருவது குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.இவ்வாறு, அந்தோணி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கை தமிழர் விசயத்துலயும் முல்லை பெரியாறு விஷயத்துலயும் அண்ணாச்சி நீங்க உண்மையை மட்டுமே சொன்னவராச்சே உங்களைப்போயி யாராவது சந்தேக படுவாய்ங்களா? ............உண்மைக்கும் உங்களுக்கும் எத்தனை கிலோ மீட்டர் தூரம்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏற்கனவே எனகளுக்கெல்லாம் காதுகுத்தி கடா வெட்டியாச்சி. நீங்க ஒன்னும் புதுசா ட்ரை பண்ண வேணாம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.