Advertisement
பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி மீது நடவடிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:29 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:53 IST

லண்டன்:நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, தூங்கி கொண்டிருந்த பைலட்டை, விமானி அறையில் பூட்டி விட்டு சென்ற, சக பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது, விமானிகள் தூங்குவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, செப்டம்பரில், நெதர்லாந்தின், "டிரான்ஸ்சேவியா' விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. சக பைலட் ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு பைலட், விமான அறையை பூட்டி கொண்டு, கழிப்பறைக்கு சென்று விட்டார்.


இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும், விமானி அறைக்கு வந்த போது, அந்த பைலட் எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார். கதவை திறக்க முடியாததால், "இன்டர்காம்' வழியாக திறக்க சொல்லியிருக்கிறார். "இன்டர்காம்' ஒலித்ததை கேட்டு, தூங்கி எழுந்த சக பைலட் கதவை திறந்தார்.அவ்வளவு நேரமும், விமானம், தானாகவே பறந்து கொண்டிருந்தது.


இந்த சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் தூங்கிய பைலட் மற்றும் விமானி அறையை பூட்டி சென்ற பைலட் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "விமானிகளில், 10 பேரில், நான்கு பேர், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கத்தான் செய்கிறார்கள். நீண்ட நேர பணியின் காரணமாக தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது' என்றனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
venkat Iyer - nagai,இந்தியா
01-பிப்-201317:57:29 IST Report Abuse
venkat Iyer கீழே விமான நிலையங்களில் உள்ள கட்டுபாட்டு அறைகளின் மூலம் விமானங்களை பைலட் உத்வி இன்றி இயக்க கூடிய விமானங்கள் வ்ந்துவிட்டதை ந்ல்லாரும் அறிய வேண்டும்.பைலட்கள் கோர்ட்டில் கேஸ் போட்டு நிலுவையில் உள்ளது.ஏரோ இன்ஜினியர் படிப்பவருக்கு நிச்சயமாக தெரிந்து இருக்கும்.பிரான்சில் மெட்ரொ டிரெயின் ஆட்டொமாடிக் முறையில் இயங்கும் ரயில் 36கி.மீ சென்று கொண்டு உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nagarajan.Su - Chennai,இந்தியா
01-பிப்-201308:17:39 IST Report Abuse
Nagarajan.Su இந்த மாதிரி பொறுப்பற்ற விமானிகளை நம்பி ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் உயிரை பயணம் வைத்து பறந்துகொண்டிருக்கிரார்கள். விமானிகளின் அறைகளில் எப்போதும் பாட்டு ஒலித்து கொண்டிருக்குமாறு செய்தாலாவது அவர்கள் விழித்துகொண்டிருப்பர்களா என்று சோதனை செய்து பார்க்கவேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Loganathan - Madurai,இந்தியா
01-பிப்-201307:32:31 IST Report Abuse
Loganathan தானியங்கி சாதனங்கள் இருப்பதால் சற்று நேரம் ஓயுவு எடுப்பதில் தவறு இல்லை
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-201306:06:43 IST Report Abuse
Lion Drsekar இவர்களை உடனடியாக பதவி இறக்கம் செய்து விட்டு விமானப் படை வீரர்களை நல்ல பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்டு இது போன்ற விமானங்களை இயக்கலாமே? பயிலட்டுக்களுக்கான பணமும் மிச்சம், எரிபொருளும் மிச்சமாகுமே? மிக மிகத் திறமை வாய்ந்த விமானிகள் பலர் கம்பனிகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுவதைவிட இது போன்ற பணிகளில் அமர்த்தினால் கட்டுப்பாடான இவர்களால் நிர்வகதிர்க்கும் பிரச்னை இருக்காது, இவர்களது திறமையும் வீணாகாது, உண்மையாகவும் இருப்பார்கள், வந்தே மாதரம்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.