லண்டன்:நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, தூங்கி கொண்டிருந்த பைலட்டை, விமானி அறையில் பூட்டி விட்டு சென்ற, சக பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது, விமானிகள் தூங்குவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, செப்டம்பரில், நெதர்லாந்தின், "டிரான்ஸ்சேவியா' விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. சக பைலட் ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு பைலட், விமான அறையை பூட்டி கொண்டு, கழிப்பறைக்கு சென்று விட்டார்.
இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும், விமானி அறைக்கு வந்த போது, அந்த பைலட் எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார். கதவை திறக்க முடியாததால், "இன்டர்காம்' வழியாக திறக்க சொல்லியிருக்கிறார். "இன்டர்காம்' ஒலித்ததை கேட்டு, தூங்கி எழுந்த சக பைலட் கதவை திறந்தார்.அவ்வளவு நேரமும், விமானம், தானாகவே பறந்து கொண்டிருந்தது. இந்த சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் தூங்கிய பைலட் மற்றும் விமானி அறையை பூட்டி சென்ற பைலட் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "விமானிகளில், 10 பேரில், நான்கு பேர், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கத்தான் செய்கிறார்கள். நீண்ட நேர பணியின் காரணமாக தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.