இஸ்லாமாபாத்:மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, பாகிஸ்தான் நீதிக் குழு, இம்மாதம், இரண்டாவது வாரத்தில், மும்பை செல்ல உள்ளது.மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த, லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதி, அஜ்மல் கசாப், சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு, பாகிஸ்தானிலும் நடக்கிறது. இது தொடர்பாக, ஏழு பயங்கரவாதிகள் உள்பட, 20 பேர் விசாரிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு, மார்ச் மாதம், இந்த வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானின் நீதிக் குழுவினர், மும்பைக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த குழுவினர் தாக்கல் செய்த விவரங்களை, அந்நாட்டு, பயங்கரவாத தடுப்பு கோர்ட் ஏற்கவில்லை.இதற்கிடையே, அஜ்மல் கசாப்பிடம் விசாரித்த போலீஸ் அதிகாரி, கசாப்பின் வாக்குமூலத்தை பதிவு செய்த மாஜிஸ்திரேட் மற்றும் அவனுக்கு சிகிச்சையளித்த, இரண்டு டாக்டர்கள் உள்ளிட்ட, நான்கு பேரிடம், பாகிஸ்தான் நீதிக் குழுவினர் விசாரிக்க உள்ளனர்.இதற்கு இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் நீதிக் குழுவினர், இம்மாதம், இரண்டாவது வாரத்தில், மும்பைக்கு செல்ல உள்ளனர்.இத்தகவலை, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்து உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.