ஈரோடு: உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், இரவு நேரத்தில் கழிவு நீரினை வெளியேற்றும் தொழிற்சாலைகளில், விவசாயிகள் சங்கத்தினரை நேரில் அழைத்துச் சென்று ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, டி.ஆர்.ஓ., கணேஷ் நேற்று உத்தரவிட்டார்.
ஈரோடு மாநகராட்சி சூரியம்பாளையம் மண்டலம் தொழில் துறையில் அபரிமிதமான வளர்ச்சியால், குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பகுதியாகும்.
சூரியம்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகள், வாய்க்கால் மற்றும் ஓடையை ஒட்டிய பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற இந்த தோல் தொழிற்சாலைகள், இரவு நேரத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வருகிறது. நான்கு டன் தோல் பதப்படுத்த அனுமதி பெற்றவர்கள், 10 டன் தோல்களை பதப்படுத்தி வருகின்றனர். கூடுதல் சிலிண்டர்களையும், அனுமதி பெற்ற சிலிண்டரின் அளவை பெரிதாக்கி கணக்குகாட்டி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இரவு நேரத்தில் கழிவுநீரினை வெளியேற்றுவதால் கடுமையான துர்நாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியர்வகள் வரையில் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக சூரியம்பாளையம் பகுதியிலுள்ள, எஸ்.கே.எம்., டேனரி, ஏ.எம்., சாதிக் டேனரி, சரவணா டேனரி, கே.பி.எஸ்., டேனரி, சுண்ணாம்பு ஓடை அருகிலுள்ள கே.கே.எஸ்.கே., டேனரி, குப்பண்ண கவுண்டர் டேனரி ஆகியவை விதிமுறை மீறி புறம்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது, என டி.ஆர்.ஓ.,விடம், சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் அப்பாஜி மனு கொடுத்தார்.
டி.ஆர்.ஓ., கணேஷ் கூறியதாவது:
விதிமுறை மீறி செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள் மீது, விவசாய சங்கத்தின் மற்றும் புகார்தாரர்களை நேரில் அழைத்துச்சென்று ஆய்வு செய்து, மாசு கட்டுப்பாட்டுத்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வேண்டும், என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.