லண்டன்:அயர்லாந்தில், பர்கர் உணவில் குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, குதிரை கறி வினியோகஸ்தருக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.அயர்லாந்தில், மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில், பர்கரில், குதிரைக் கறி வைத்து விற்கப்படுவதாக, புகார் எழுந்தது. இதுகுறித்து, வாடிக்கையாளர்கள், அரசிடம் புகார் தெரிவித்தனர்.அயர்லாந்து, விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அங்குள்ள, பர்கர் தயாரிப்பு மையங்களில், கால்நடை மருத்துவர்கள், சோதனை நடத்தினர்.
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், "டெஸ்கோ' நிறுவனம் தான், குதிரை கறி அடங்கிய, பர்கர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தது. குதிரை கறி அடங்கிய பர்கரை, வினியோகம் செய்ததால், டெஸ்கோ நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை இழந்து விட்டது. இதை அடுத்து, குதிரை கறி பர்கர்களை வினியோகித்த, "சில்வர் கிரஸ்ட்' என்ற நிறுவனத்திற்கும், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, "டெஸ்கோ' நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் டிம் ஸ்மித் குறிப்பிடுகையில், ""வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு என்பது மிக முக்கியம். இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்க, கறி உணவுகளில், டி.என்.ஏ. பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு குதிரை கறியை வினியோகித்த, சில்வர் கிரஸ்ட் நிறுவன சேவையை ரத்து செய்து விட்டோம்'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.