district news | மெட்ரோ ரயில் ஊழியர்கள் பதுக்கிய 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் ஊழியர்கள் பதுக்கிய 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : பிப் 01, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : வண்ணாரப்பேட்டையில், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பதுக்கிய, 1,100 கிலோ ரேஷன் அரிசியை, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய பணியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
இவர்களில், 150 பேர் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டதாக, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராயபுரம் குடிமை பொருள் உதவி ஆணையர் பொன்னுசாமி நேற்று, திருமண மண்டபத்திற்கு சென்று சோதனையிட்டார். சோதனையில், மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raaj - chennai,இந்தியா
01-பிப்-201310:22:51 IST Report Abuse
Raaj யோவ், அவனுங்க பாவம் யா .சாப்பாட்டுக்காக வாங்கி வச்சிருப்பரகள் .அதப்போய் புடுங்கி பேர் வாங்கிட்டியே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை