சென்னை : வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு,வகுப்புகள் எடுக்கப்பட்டன.வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில்,
வன மற்றும் செல்ல பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள், சிகிச்சை முறைகள்
குறித்து, உயிரியல் பூங்கா மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு
பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த ஆலோசனை முகாமில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
காயம் அடைந்த கிளியின் காலில், "எக்ஸ் - ரே' எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கால் பகுதிக்கு, தகுந்த சிகிச்சைஅளிக்கப்பட்டது.
தொற்று
நோய்களால், பறவைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்டறிய, ரத்தம்,
எச்சம் மூலம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வேப்பேரி கால்நடை மருத்துவ
கல்லூரி, நோய் குறியியல் துறை தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், ""வீட்டில்
வளர்க்கப்படும் பறவைகளின் காலில் அடிபட்டால், அவற்றை நடக்க விடக்கூடாது.
மருத்துவரிடம் காண்பித்து
சிகிச்சையளிக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.