சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, எட்டு மற்றும் ஒன்பதாவது வார்டு மக்கள், போர்வெல் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய வலியுறுத்தி, நேற்று காலை, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு சுயேட்சை கவுன்சிலர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக, செயல் அலுவலரிடம் கடித்தம் கொடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, எட்டாவது வார்டு அருந்ததியர் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கு வசதியாக, போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைக்கப்பட்டுள்ளது. அந்த போர்வெல், எட்டு மற்றும் ஒன்பது ஆகிய இரண்டு வார்டு மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வார்டு மக்களும், போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாதபடி, டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சாய் பாலமுருகன் குழாய் அமைத்து, தனது வார்டுக்கு தண்ணீர் சப்ளை செய்துள்ளார். அதனால், மேற்குறிப்பிட்ட, எட்டு, ஒன்பதாவது வார்டு மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம், பலமுறை புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தியடைந்த இரு வார்டு மக்கள், நேற்று காலை, எட்டாவது வார்டில் போர்வெல் அமைக்கப்பட்ட இடத்தில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, அங்கு விரைந்து சென்ற டவுன் பஞ்சாயத்து சேர்மன் ரவி, செயல்அலுவலர் மகாலிங்கம் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு வார்டு மக்களும், "போர்வெல் தண்ணீர் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தனர்.
இதற்கு, கவுன்சிலர் சாய் பாலமுருகன் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், அதை பொருட்படுத்தாத டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், எட்டு, ஒன்பதாவது வார்டுக்கு சம்மந்தப்பட்ட போர்வெல் மூலம் குழாய் அமைத்து, தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். அதையடுத்து, மக்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே, இப்பிரச்னை காரணமாக, 11வது வார்டு கவுன்சிலர் சாய் பாலமுருகன், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இது, சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.