Polio vaccine to those trapped in the mine killed in Pakistan | போலியோ மருந்து கொடுக்க சென்றவர்கள்பாகிஸ்தானில் கண்ணிவெடியில் சிக்கி பலி| Dinamalar

போலியோ மருந்து கொடுக்க சென்றவர்கள்பாகிஸ்தானில் கண்ணிவெடியில் சிக்கி பலி

Updated : பிப் 01, 2013 | Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற இருவர், கண்ணிவெடியில் சிக்கி பலியாயினர்.சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், 2011ம்ஆண்டு, அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானிய டாக்டர், ஷகில் அப்ரிடி என்பவர், போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போல சென்று, அபோதாபாத்தில், ஒசாமா தங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தார்.இதனால், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை எதிர்க்கின்றன.இதற்கிடையே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில், கடந்த மாதம், மூன்று நாட்கள், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்க சென்ற ஊழியர்கள், எட்டு பேரை, பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.


இந்த சம்பவங்களால், உலக சுகாதார நிறுவனம், பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து வினியோகத்தை அப்போது நிறுத்தியது.இதற்கிடையே, நேற்று, பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில், சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களின் வாகனம், கண்ணிவெடியில் சிக்கி சிதறியது. இதில் இருவர் பலியாயினர்.இரண்டு நாட்களுக்குமுன், கைபர் பக்துன்கவா பகுதியில், சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை