ராசிபுரம்: கூனவேலம்பட்டி புதூரில், மலைக் குன்றுகளில், முறைகேடான வகையில், வெடி வைத்து, பாறை தகர்க்கப்படும்போது, சிதறும் கற்கள், அங்குள்ள வீடுகள், விளை நிலங்களில் விழுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூரில், அழியா இலங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகே உள்ள மலைக் குன்றுகளில் இருந்து, சிறிய கற்களை வெட்டி எடுக்க, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் அனுமதி பெற்றுள்ளார்.
எனினும், இரவு நேரத்தில், மலையில் உள்ள பெரிய கற்களை விதிமுறை மீறி வெடி வைத்து தகர்கும் நடவடிக்கையில், அவர்கள் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, மாலை, 6 முதல் இரவு, 12 மணி வரை, பெரிய கற்கள் வெட்டி கடத்தப்படுகிறது. அவ்வாறு கற்கள் வெடி வைத்து தகர்க்கப்படும்போது, அவை சிதறி, அருகே உள்ள குடியிருப்புகள் மீது விழுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, குன்றுகளில் வெடி வைத்து, பெரிய கற்கள் தகர்க்கப்பட்டன.
அப்போது சிதறிய கற்கள், அங்குள்ள விளை நிலம் மற்றும் வீடுகள் மீது விழுந்தது. அதில், நடராஜன் என்பவரது மனைவி சரஸ்வதி காயமடைந்தார். அதுபோல், பலரது வீடுகள் மற்றும் வயல்களில் கற்கள் விழுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நாள்தோறும், வீடுகள் மற்றும் விளை நிலங்களில் கற்கள் விழுவது தொடர் கதையாக உள்ளது. கூனவேலம்பட்டிபுதூர் வி.ஏ.ஓ., ரங்கநாதனிடம் புகார் செய்தாலும், அவர் நடவடிக்கை எடுப்ப்பதில்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சம்மந்தப்பட்ட வருவாய்துறை உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.