திருச்சி: தண்ணீர் பாய்ச்சும் தகராறில் பங்காளியை வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உள்பட, நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மேலகார்த்திகைப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 57. சுக்காம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன், 50. இவரது தம்பி சின்னதுரை, 42. இவர்கள், இருவரும் கருப்பசாமியின் பங்காளிகள். மூவருக்கும் சொந்தமான வயல் அருகருகே உள்ளது. தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 2010ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி கருப்பசாமி, தனது மனைவி ஜெயமணியுடன், கறவை மாடுகளுக்கு பால் கறக்க சுக்காம்பட்டி சென்றார். அப்போது, அங்கு வந்த முத்துக்கருப்பன், இவரது மகன் ராஜா, சின்னதுரை, இவரது மனைவி சின்னப்பிள்ளை, 35, ஆகியோர் அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக தொட்டியம் போலீஸார், வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட, இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
"இந்த நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது, எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்' என, மதுரை உயர்நீதிமன்றத்தில் கருப்பசாமியின் மனைவி ஜெயமணி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்க கோரி, முத்துக்கருப்பன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் இவ்வழக்கு தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், முத்துக்கருப்பன், ராஜா, சின்னதுரை, சின்னப்பிள்ளை ஆகிய, நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 1,000 ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.