DISTRICT NEWS | செங்கோட்டையில் தி.மு.க.,ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையில் தி.மு.க.,ஆர்ப்பாட்டம்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:செங்கோட்டையில் தி.மு.க.,தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். செயலர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். தி.மு.க.,பேச்சாளர் சாட்டையடி சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

மத்திய சங்க இணை செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, மீனாட்சி சுந்தரம், முருகன், ஐயப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பணிமனை தொ.மு.ச.,பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை