திருநெல்வேலி:பாளை.,யில் காங்கிரஸ் சார்பில் வரும் 18ம் முப்பெரும் விழா நடக்கிறது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ.,வேல்துரை நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நூற்றாண்டு விழா, காங்.,128வது ஆண்டு விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா பாளை.,மார்க்கெட் மைதானத்தில் வரும் 18ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு காங்.,பொதுசெயலாளர் பீட்டர் அல்போன்ஸ், எம்பி.,ராமசுப்பு உட்பட காங்,.முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
விழாவில், இந்திரா விருது, காமராஜ் விருது, ஜி.கே.மூப்பனார் விருது, ராஜீவ் விருது, சிறந்த மாணவர்களுக்கு விருது போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் காங்.,128வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்து 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
விழாவில் சிறப்பு அம்சமாக முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியனின் குடும்ப உறவினர்கள் 38 பேர் கவுரப்படுத்தப்படுகிறார்கள்.
ஏற்பாடுகளை காங்.,ஐஎன்டியுசி.,சேவாதளம் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் துணை அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர்.
இவ்வாறு மாஜி எம்எல்ஏ.,வேல்துரை கூறினார்.
அப்போது,ஐஎன்டியுசி.,ஆவுடையப்பன், கவுன்சிலர் உமாபதி சிவன், சுத்தமல்லி முருகேசன், சங்கரபாண்டியன், தச்சை சண்முக ராஜ், ஐஎன்டியுசி.,சுடலைமுத்து உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.