திருநெல்வேலி:தமிழகத்தில் 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது.
தமிழகத்தில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2 கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி முகாம் இன்று (1ம் தேதி) ஆரம்பமாகிறது.
இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் நெல்லை டவுன் அரசு மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் மேல்நிலைப் பள்ளி, தென்காசி கல்வி மாவட்டத்தில் ஐ.சி.இ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் இப்பயிற்சி நடக்கிறது.
இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் தமிழ் 285, ஆங்கிலம் 50 ஆசிரியர்கள், கணிதம் 287, அறிவியல் 295, சமூக அறிவியல் 171 உட்பட மொத்தம் ஆயிரத்து 88 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் அறிவியல் பாடத்திற்கு இன்று (1ம் தேதி) முதல் நாளை, வரும் 13, 14ம் தேதிகளிலும், ஆங்கில பாடம் வரும் 8,9,20,21ம் தேதிகளிலும், தமிழ் பாடம் வரும் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும், கணித பாடம் வரும் 4,5,15 மற்றும் 16ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடம் வரும் 11, 12, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் காதர் சுல்தான் ஆலோசனையின் பேரில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நடந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்பன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன், திட்ட பணியாளர்கள் சாந்தி, சங்கர் பாலாஜி, மாரி சங்கர், பாப்பு, கண்ணன், அருள்ஜோதி, சிவலிங்கம் செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.