சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் நேற்று பூட்டியிருந்த மின்வாரிய இன்ஜினியர் வீடு உட்பட இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சங்கரன்கோவில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் மீரான்சேட் காலனி உள்ளது. இங்கு கிருஷ்ணசாமி மகன் நடராஜன் வசித்து வருகிறார். இவர் சங்கரன்கோவில் டவுன் மின்வாரிய அலுவலகத்தில் உதவி இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் மகன் சாமிநாதன் வசித்து வருகிறார். இவர் மாவு மில்களுக்கு பிளேட் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோயில் கொடை விழாவிற்காக நடராஜன் வீட்டை பூட்டி விட்டு மம்சாபுரத்திற்கு சென்று விட்டார். அதேபோல் அருகில் உள்ள வீட்டை சேர்ந்த சாமிநாதன், அவரது மனைவியின் சிகிச்சைக்காக சென்னைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனால் அடுத்தடுத்துள்ள இரண்டு வீடுகளும் ஆட்கள் இல்லாமல் பூட்டி இருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் நடராஜன் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த துணிகள் அனைத்தும் கீழே வீசப்பட்டு இருந்தது. இதில் நடராஜன் வீட்டில் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதன் பின்னர் தான் சாமிநாதன் வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. சாமிநாதன் சென்னையில் இருப்பதால் அவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து சாமிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் டவுன் போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் விசாரணை நடத்தினர்.
சங்கரன்கோவிலில் ஒரே நாளில் அடுத்தடுத்து உள்ள இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.