Advertisement
பைக் மீது பஸ் மோதி மாணவன் பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
03:24

தூத்துக்குடி: தூத்துக்குடி பைக் மீது பஸ் மோதிய விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக பலியானார். உடன் சென்ற மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிங்கத்துரை மகன் சுப்பிரமணியன்(16) தங்கம்மாள்புரம் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இவரது நண்பர் முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் ரூபன்ராஜா (14) அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அத்திப்பட்டி விலக்கு பகுதியில் இருவரும் பைக்கில் சென்ற போது அங்கு வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் சம்பவ இடத்திலயே சுப்பிரமணியன் இறந்தார். ரூபன்ராஜா படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இறந்து போன சுப்பிரமணியன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.