உடன்குடி:உடன்குடி, மணப்பாடு பள்ளிகளில் தேசிய வாக்களர் தினம் நடந்தது.
உடன்குடி நைனாப்பிள்ளைத்தெரு பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய வாக்காளர் தினத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் அமுதா, விக்டோரியா, மனோலின், வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அலுவலர் வனஜா கலந்து கொண்டு வாக்காளர் அடையாள அட்டையை அந்தந்த உறுப்பினர்களுக்கு வழங்கினார். இதில் மாணவர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். 18 வயது நிரப்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் கண்டிப்பாக நமது வாக்குரிமையை நல்ல தலைவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் மனோகர், சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜீவன் முன்னிலை வகித்தார். மாணவர் பெர்னாட்ஷா இறைவணக்கம் பாடினார். ஆசிரியர் சத்திரியன் வரவேற்றார். இதில் வாக்காளர் தினம் பற்றி ஆசிரியர் ஜீவனும், இளங்கோவும் பேசினர். பின் மாணவ, மாணவிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டையை வி.ஏ.ஓ மற்றும் அலுவலக உதவியாளர்கள், வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பேசினார். மேலும் மாதிரி வாக்குச்சாவடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையில் மாணவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.