கோவில்பட்டி:கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குள் தொழில் நடத்துவோர் வரும் பிப்.28ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பிக்க வேண்டுமென நகராட்சி கமிஷ்னர் அறிவித்துள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகள், உணவகங்கள், இரவு உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பால் பொருட்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான கடைகள், மினரல் வாட்டர் சேகரிப்பு மற்றும் விற்பனையாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், பழக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்போர், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் புரிவோர், அச்சகங்கள், வெல்டிங் பட்டறைகள், மீன்கடைகள், பெட்ரோல் பங்குகள், அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துவோர் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
இதில் குறிப்பிட்ட தொழில் நடத்துவோர் தங்களது நிறுவனங்களுக்கு எந்தவொரு இதர அரசுத்துறைகளில் அனுமதி பெற்றிருந்தாலும் கோவில்பட்டி நகராட்சியில் உரிமம் பெறுவது கட்டாயமாகும். தற்போதைய 2013 - 2014ம் ஆண்டிற்குரிய சம்பந்தப்பட்ட நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிமக்கட்டணத்தையும், விதிக்கப்பட்டுள்ள தொழில் வரியையும் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி உரிமத்தை புதுப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
மேலும் அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கு உரிமத்தினை பெறாமல் தொழில் புரிவோர் மீது மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 249ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் தொழில் நடத்துவோர் வரும் பிப்.28ந்தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி மேல் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர் வரதராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.