விருத்தாசலம் : மார்க்கெட்
கமிட்டியில், விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை அடமானம் வைத்து, குறைந்த
வட்டியில் கடன் பெறலாம் என விற்பனைக்குழு செயலர் அரிதாஸ் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம்
கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தற்போது சம்பா நெல் அறுவடை செய்யும்
பணி துவங்கியுள்ளது. இதனால் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு தினமும்
நெல் வரத்து அதிகரித்து வருகிறது. கமிட்டியில் இடப்பற்றாக்குறை, சாக்கு
பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை, வியபாரிகள் வாங்கிய நெல்லை உடனே எடுத்துச்
செல்லாமல் வாரக்கணக்கில் தேக்கி வைத்திருப்பது போன்ற காரணங்களால் நெல்
மூட்டைகள் தேக்கமடைகின்றன.
நேற்று வரத்து அதிகமிருந்ததால், 20 ஆயிரம்
நெல் மூட்டைகள், 2 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் இன்று
(1ம் தேதி) கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இடப்
பற்றாக்குறையால், விவசாயிகள் இன்று நெல்லை எடுத்து வரவேண்டாம் என
அறிவித்து, கேட் மூடி வைக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்குழு செயலர் ஹரிதாஸ்
கூறுகையில், "சம்பா அறுவடை துவங்கியுள்ளதால் தினசரி 20 ஆயிரம் நெல்
மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கமிட்டியில் ஆள் மற்றும்
இடப்பற்றாக்குறையால் சிரமம் ஏற்படுகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த
நெல்லை, உலர வைத்து, சுத்தமாக எடுத்து வந்தால் கூடுதல் விலை கிடைக்க
வாய்ப்புள்ளது. ஆனால் விவசாயிகள் அவசர பணத் தேவைக்காக, அறுவடை செய்த நெல்லை
ஈரப்பதத்துடன் எடுத்து வருகின்றனர்.
மார்க்கெட் கமிட்டியில்,
விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியுடன், 2 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக் கடன்
வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், விளை பொருட்களை எடுத்து வந்து, ஆறு
மாதம் வரை அடமானம் வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். கொள் முதல் விலை
உயரும்போது விற்று பயனடையலாம்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.