செஞ்சி : செஞ்சி அருகே பைக் மீது வேன் மோதி வாலிபர் இறந்தார்.
செஞ்சி
தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பாலாஜி, 28. இவர்
அண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவர்
நேற்று மாலை 3.15 மணியளவில் வளத்தியில் இருந்து அண்ணமங்கலத்திற்கு
பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
கன்னலம் கிராமம் அருகே வந்த போது
செஞ்சியில் இருந்து படவேடு சென்ற டூரிஸ்ட் வேன் பைக் மீது மோதியது. இதில்
பாலாஜி படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வளத்தி இன்ஸ்பெக்டர்
ராஜா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் பாலாஜியை செஞ்சி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி
இறந்தார்.
விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.