விழுப்புரம் : விதிமுறைகளை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி
அடுத்த மதகடிப்பட்டு வாரச் சந்தையிலிருந்து 21 எருது மாடுகளை ஏற்றிக்
கொண்டு லாரி ஒன்று, கடந்த 29ம் தேதி இரவு மணப்பாறைக்கு சென்று
கொண்டிருந்தது.
அதிகபட்சமாக 7 மாடுகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டிய
ஒரு லாரியில், மூன்று மடங்கு எண்ணிக்கையான 21 மாடுகளை ஏற்றிச் சென்றதால்,
கால்நடைகள் மிகவும் சிரமம் அடைந்தன. இதனை பார்த்த "புளூ கிராஸ்' அமைப்பைச்
சேர்ந்த மனோஜ்சுந்தரம், நெடுங்கிள்ளி ஆகியோர் போலீசில் புகார் செய்தனர்.
விழுப்புரம்
தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மாடுகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரி டிரைவர் செல்வேந்திரன், கிளீனர் விஜய் மற்றும் லாரியில் பயணம்
செய்த அப்துல்காதர், சித்திக் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.