இளையான்குடி:
இளையான்குடி பேரூராட்சியில் நிதி ஒதுக்குவதில் தலைவர் பாரபட்சம்
காட்டுவதாக கூறி 5 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முனியாண்டி
தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்து வெளிநடப்பு செய்தார். இளையான்குடி
பேரூராட்சியில் ஐ.யு.டி.எம் ., திட்டத்தில் 2013 - 2014 ம் ஆண்டுக்கு செய்ய
வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் நேற்று தலைவர் அயூப் அலிகான் ( சுயேட்சை )
தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட 5 வது வார்டு உறுப்பினர் முனியாண்டி ,
இத்திட்டத்தில் வரும் நிதியை அனைத்து வார்டுக்கும் பிரித்து கொடுக்க
வேண்டும் என வைத்த கோரிக்கையை தலைவர் ஏற்க மறுத்ததால் , கூட்டத்தில்
இருந்து வெளிநடப்பு செய்தார். கவுன்சிலர் முனியாண்டி கூறுகையில் ""
ஐ.யு.டி.எம்., திட்டத்தில் 13 வது வார்டில் மட்டும் ரூபாய் ஒரு கோடி
மதிப்பில் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்த்து அனைத்து
வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஏதுவாக நிதியை பிரித்து ,
வேலைகளை தேர்வு செய்ய கோரிக்கை வைத்தேன். தலைவர் ஏற்க மறுத்ததால்
தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். தலைவர் அயூப் அலிகான் கூறுகையில் , ""
ஐ.யு.டி.எம் ., திட்டத்தில் ஒரு கி.மீ.,மேல் உள்ள தார்சாலைகள் மட்டுமே
மேற்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளதால்,பேரூராட்சியில் 13 வது வார்டில்
மட்டுமே ஒரு கி.மீ., க்கு மேல் தார் சாலை செல்கிறது.எனவே அந்த வார்டில்
தார்சாலை அமைக்க முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை கூறியதை ஏற்க
மறுத்து ,கவுன்சிலர் முனியாண்டி வெளியேறினார்.மேலும் அவர் மட்டுமே
கூட்டதிற்கு வந்தார். மற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வரவில்லை.கூட்டத்தில்
கலந்து கொண்ட மற்ற 10 உறுப்பினர்களை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.