காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் ஒன்றியத்தில் 152 சத்துணவு மையங்கள்
செயல்படுகிறது.பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் சத்துணவுடன் கூடிய முட்டை
வழங்கப்படுகிறது.இதற்காக சத்துணவு பொருப்பாளர்கள் கல்வி ஆண்டு துவக்கத்தில்
மாணவர்கள் சேர்க்கை குறித்த விபரங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து,மாவட்ட
நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று, ஒப்புதல் பெற்ற புள்ளிவிபரப்படி
மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டில்
மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விபரங்களை சத்துணவு பொறுப்பாளர்கள்
தெரிவித்தும், இறுதி பட்டியல் , இன்றுவரை
தயார் செய்யப்படவில்லை. கடந்த
ஆண்டு மாணவர் பட்டியல் அடிப்படையில் சத்துணவு வழங்கப்படுகிறது.இதனால்
முட்டைக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு
முட்டை யை பாதியாக பிரித்து கொடுத்து வருவதால், மாணவர்கள்
ஏமாற்றமடைகின்றனர்.சத்துணவு பொறுப்பாளர்கள் கூறுகையில்,"" சத்துணவு
சாப்பிடும் மாணவர்களின் என்ணிக்கையை ஜூலை மாத இறுதிக்குள் நிர்ணயம் செய்து
வழங்க வேண்டும். காலதாமதமாக வழங்குவதால் உணவு பொருட்களின் அளவு,முட்டையின்
எண்ணிக்கை குறைந்து விடுகிறது. சில இடங்களில் மாணவர்களுக்கு பாதி முட்டையை
வழங்க வேண்டியுள்ளது. அரசு வழங்கிய பொங்கல் போனசும் இன்று வரை
கிடைக்கவில்லை. சம்பளமும் கால தாமதமாக கிடைக்கிறது,''என்றனர். அதிகாரிகள்
கூறுகையில்,"" மாணவர்கள் எண்ணிக்கை குறித்த இறுதி பட்டியல் மாவட்ட
நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் வந்து
விடும். போனஸ் பொறுப்பாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது,''
என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.