பரமக்குடி: பரமக்குடியில் அரசு சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதிக்கு, புதிய கட்டடம் பணி முடிவடையவில்லை. பத்து ஆண்டுகளாக ஒரே அறையில் செயல்படும், வாடகை கட்டடத்தில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பரமக்குடி அரசு கலைக்கல்லூரி, அரசு உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான விடுதி, ஆர்ச் அருகில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை, பாத்ரூம் மட்டுமே உள்ளது. மேலும், ஒரேயொரு ஹாலில், தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு சரியாக வழங்காதது மற்றும் புது கட்டடம் கட்ட கோரி, மாணவர்கள், அடிக்கடி மறியல் மற்றும் தாலுகா அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து எமனேஸ்வரத்தில் 48 லட்சம் ரூபாயில் விடுதி கட்டடப்பணி கடந்தாண்டில் துவங்கியது. கட்டி முடிக்கும் தருவாயில் பொதுப்பணித்துறையினர், 5 லட்ச ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளதாக கூறி, இறுதி கட்டப்பணிகள் மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர், கிடப்பில் போட்டு சென்றார். மாணவர்கள் தொடர்ந்து வாடகை கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் ஒரே ஹாலில் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க, தூங்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். வீணாக வாடகையும் öŒலுத்தி வருகின்றனர்.கட்டடப்பணியை விரைவில் முடித்து விடுதி செயல்பட பிற்பட்டோர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.