காரியாபட்டி: காரியாபட்டியில்,சுகாதார பணிகள் சரிவர நடைபெறாததால் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் காந்திமதி தலைமையில், துணை தலைவர் பாரதாதேவி, செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம்:குருசாமி: கேட் வால்வு உடைந்து பல நாட்களாகி, பணியாளர்கள் சரி செய்யாததால் தண்ணீர் வீணாகிறது. கருப்பையா: 9வது வார்டில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.பெரியசாமி: தரைதள தொட்டி திருகு உடைந்ததால் தண்ணீர் வீணாகிறது.செயல் அலுவலர்: விரைவில் சரி செய்யப்படும்.பரமசிவம்: 30 ஆண்டுகளாக கட்டப்படாத பாலத்திற்கு, நிதி ஒதுக்கியதற்கு, வார்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வார்டில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கருப்பையா: தெருக்களில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர்: தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில் சரிசெய்யப்படும். குருசாமி: புதிய தெருக்களுக்கு, தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.தலைவர்: விரைவில் அமைக்கப்படும்.தர்மமுனீஸ்வரன்: மெயின் ரோட்டில் உள்ள மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். நாய், பன்றிகள் தொல்லை அதிக அளவில் இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். செயல் அலுவலர்: வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய், பன்றிகளை பிடித்து செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.