ராஜபாளையம்:
""புகார் கொடுத்து ஆறுமாதங்களாகியும், நடவடிக்கை இல்லை. தமிழக அரசிற்கு
கெட்ட பெயரை ஏற்படுத்த அதிகாரிகள் முயல்வதாக,'' செல்வராஜ்,அ.தி.மு.க.,
கவுன்சிலர் நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.கூட்டத்திற்கு தலைவர்
தனலட்சுமி தலைமை வகித்தார். கமிஷனர் சுல்தானா முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்களின் விவாதம்:
ஞானசேகரன்: மலையடிப்பட்டி நான்குமுக்கு ரோடு
முதல் விடுதி வரை உள்ள ரோடு, நடுவில் பள்ளமாக இருபுறமும் மேடாக உள்ளது.
செல்வராஜ்: "எஸ்டிமேட்' போட்ட திட்ட பணிகள் இதுவரை நடக்கவில்லை. ஓடையை
மறித்து வீடு கட்டுகின்றனர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு
புகார் கூறினால், ஆறுமாதமானாலும், கண்டுகொள்வதே இல்லை. அதிகாரிகள் அரசுக்கு
கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.மணிகண்ட ராஜா: திட்டப்பணிகள்
நடப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. கோபாலகிருஷ்ணன்: ஒரு திட்டம் வந்தால்,
அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்து கொடுப்பதில்லை. சங்கர் கணேஷ்: ஒன்றாவது
வார்டுக்கு நிதியை ஒதுக்கவில்லை. வங்கிகள் மூலம் அரசு நலதிட்ட உதவிகள்
கிடைப்பதில் தாமதமாகிறது. பாஸ்கரன்: டி.பி. மில்ஸ் ரோடு ஆரம்ப சுகாதார
நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக மாற்றி, நர்ஸ்கள் நியமித்ததற்கு தமிழக
அரசுக்கு நன்றி. இது போல நலதிட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள்
ஒத்துழைக்கவேண்டும், இவ்வாறு விவாதம் நடந்தது.41 தீர்மானம்
நிறைவேற்றப்பட்டன. துணைதலைவர் ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.முன்னதாக,
நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் இறந்ததற்கு, மவுன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.