கூடலூர்: கூடலூர் நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கான, நவீன குடியிருப்பு திறப்பு விழா காணப்பட்டது. உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடலூர் நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு, நவீன குடியிருப்பு கட்டப்பட்டது. இக்குடியிருப்பை, தமிழக முதல்வர் ஜெ., வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். முதற்கட்டமாக, 12 துப்புரவு பணியாளர்களுக்கு, வீடுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா, நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், நகராட்சி தலைவர் அருண்குமார் முன்னிலையில் நடந்தது. கம்பம் நகராட்சி தலைவர் சிவகுமார், கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் கரிகாலன், நகராட்சி பொறியாளர் மணிமாறன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.