தேனி:
தேனி மாவட்டத்தில், நகை அடகு பிடிக்கும், "பான் புரோக்கர்களிடம்' இருந்து
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தப்பி விட்டன. நகை அடகு பிடிக்கும்
பான்புரோக்கர் உரிமம் பெற்ற ஏழு நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிறுவனங்கள்
தாங்கள் அடகு பிடித்த நகைகளை, கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள்,
தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அடகு கடை நிறுவனங்களில் பல கோடி
ரூபாய்க்கு மறு அடகு வைத்து விட்டு, தங்கள் நிறுவனங்களை மூடி விட்டன.
மாவட்ட போலீஸ் நிர்வாகம், யாரும் எதிர்பார்க்காத நிலையில், மறு அடகு
வைக்கப்பட்ட நகைகள் முழுவதையும், ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் மீட்டது.
நகைகள் மீட்கப்பட்டதால், மறுஅடகு வாங்கிய நிறுவனங்கள் இதில் முதலீடு
செய்திருந்த பணம் முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. நகை அடகு வைத்தவர்கள்
நகைகளை திருப்பிய பின்னர், அந்த பணத்தை சேர்த்து கோர்ட் மூலம் மறுஅடகு
வாங்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.அதுவும் வட்டி வந்து சேருமா, சேராதா,
அதிக தொகைக்கு மறு அடகு வாங்கியதால், முதலீடு செய்த பணம் முழுவதும்
திரும்ப வருமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால் மறுஅடகு வாங்கிய
நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகள் குளறுபடி இன்றி இயங்கி வருகின்றன.
இந்த வங்கிகள் நகை கடன்
வழங்குவதற்கு குறைந்த வட்டியும், அதிக விதிமுறைகளும் வகுத்து வைத்துள்ளன.
பேராசைப்பட்டு, ஒரே நபருக்கு வரம்பின்றி கடன் வழங்குவதில்லை. எந்த
சூழ்நிலையிலும் நகைகளை மறுஅடகு வாங்குவதில்லை. ஒவ்வொரு பயனாளிகளையும்
நேரடியாக ஆய்வு செய்த பிறகே கடன் வழங்குகின்றன.
வறட்சி பாதித்த பகுதிகள் கணக்கெடுப்பு நடக்கிறது
தேனி:
தேனி மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகள், கணக்கெடுப்பு நடப்பதாக,
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தேனி
கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகள்: தேனி மாவட்டத்தில் சொட்டு
நீர்ப் பாசனம் அமைத்ததற்கு மானியங்கள் சரியாக கிடைப்பதில்லை. கடமலைக்குண்டு
கிராமம், துரைசாமிபுரம் ஜமீன் வண்டிப்பாதையாக உள்ள மங்கமாள் சாலையில்
புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற பலமுறை தாசில்தாரிடம் புகார் செய்தும்
நடவடிக்கை இல்லை.கால்நடைகளை காப்பாற்ற இலவச பசுந்தீவனங்கள் வழங்க வேண்டும்.
பெரியகுளம் ஜெயமங்கலம் ராஜவாய்க்காலில் இரு கரைகளிலும் சர்வே செய்து, ரோடு
வசதி செய்து தர வேண்டும். மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால் காய்ந்து
வரும் பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை
எழுப்பினர். மாவட்டம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகள் கணக்கெடுப்பு
நடத்தப்படுகிறது. அதையொட்டி, அறிக்கை தயாரிக்கப்படும். அரசாணை
வரப்பெற்றவுடன் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும்,என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.