கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட போதும், மின்நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால், கம்பத்தில் ஆயிரத்து 400 ஏக்கர் நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.முல்லைப் பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணையின் நீர் மட்டம் உயரவில்லை. ஒரு போக நெல் சாகுபடி கைவிடப்பட்டது.தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் சாகுபடி அறுவடை துவங்கியுள்ளது. கம்பத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, ஆயிரத்து 400 ஏக்கர் நெல் சாகுபடிக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வேண்டும்.அணையில் இருந்து 400 கன அடியாக திறக்கப்பட்டது. படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது விநாடிக்கு 100 கனஅடி திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீரை பயன்படுத்தி கம்பம் விவசாயிகள்,சாகுபடி செய்துள்ள நெல் பயிரை காப்பாற்ற படாதபாடு பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லோயர்கேம்ப் மற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள "மைக்ரோ' மின்நிலைய நிர்வாகம், திறந்துவிடப்படும் 100 கனஅடி தண்ணீரை வாய்க்காலில் விடாமல் தேக்கி வைத்துள்ளது.இதனால் கம்பத்தில் நெல் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. அறுவடைக்கு தயாராகும் சமயத்தில், தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகளை அணுகிய போதும், பலனில்லை.மின்நிலையத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தாலும் பரவாயில்லை. சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் தேவைப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும், எனவே தண்ணீரை விடுவிக்க முடியாது என்றும் மின்நிலைய வட்டாரங்கள் கூறியுள்ளன.டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதும் இல்லாத நிலையில், தஞ்சை அடுத்து நெல் சாகுபடி அதிகமாக மேற்கொள்ளும், கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள "நெருக்கடிக்கு' கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.